சிறகு

சிறகுகளை சிறையிட்டு
பறக்க சொல்கிறது…..
உலகம்

எனது தோழமை

அறிமுகமே இல்லாமல்..
அவசர அவசரமாய் …
உன்னிடம் கடன் வாங்கிய..
பேனாவில் தொடங்கியது
நம் நட்பு..🥰

சுமை

புத்தக சுமை கொடுமை
வீட்டு பாடங்கள் கடுமை
மாற வேண்டும் இந்நிலமை

படிப்பு அஸ்த்திவாரம் பணம்
புத்தக சுமை கணம்
தடுமாறும் கால்கள் தினம்

முதுகு வளைந்த பாலமாகும்
குழந்தைகள் அவதி பாவமாகும்
குறைப்பது அனைவர் கடமையாகும்

புத்தக சுமையால் கூனியா?
தடுமாறும் கால்கள் சகுனியா?பாவம்

புத்தகம் ஒப்புவித்து மதிப்பெண்
மனப்பாடம் செய்து தேர்வு தவறு…

கலாச்சாரம்

உழவர் அல்லது விவசாயி (farmer) என்பவர் நிலத்தில் உழுது விவசாயம் அல்லது வேளாண்மை செய்பவர்கள். பண்டைத் தமிழகத்தில் “உழவர்” என்ற சிறப்புப்பெயர் மிகவும் உயர்ந்தவர் பெறும் பட்டமாக மதிக்கப்பட்டது.[1] சுழன்றும் ஏர்ப் பின்னது உலகு என உழவுத்தொழில் பாராட்டப்பட்டது. ஆயினும் நிலக்கிழார்களின் ஆதிக்கத்தின் கீழ் கடந்த சில நூற்றாண்டுகள் அவர்களது நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதனிலிருந்து மீட்க பல உழவர் இயக்கங்கள் உலகெங்கும் தோன்றின. உழுகின்ற உழவருக்கு இடைத்தரகர்கள் மூலம் சரியான விலை கிடைக்காதிருந்ததைத் தவிர்க்க தமிழக அரசு உழவர் சந்தை என்ற நேரடி சந்தை முறையினை அறிமுகப்படுத்தியது. தவிர வருமான வரி விலக்கு, உர மானியம், உழவர் காப்பீடு என்பன மூலம் அவர்களுக்கு பொருளியல் ஆதரவு அளிக்கப்படுகிறது.[2][3]

தைப்பொங்கல்

பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும்.[1] இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.[2]

மாட்டு பொங்கல்

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்

விண்ணாலும் பெண்ணை வீட்டிற்க்கு

பெண்ணும் சிறந்தவள் தான் விண்ணாலும் பெண்ணை வீட்டிற்க்குள் அடைக்காதே…!!! மண்ணாலும் பெண்ணை மண்டியிட வைக்காதே…!!!! ஆண்களால் தான் முடியும் என்று ஆணவம் கொள்ளாதே…!!!! பெண்ணாலும் முடியும் என்று எந்நாளும் சொல்ல மறக்காதே…!!!!!!! ஆணாக பிறந்தால் ஆதிக்கம் செலுத்தாதே….!!!!!! பெண்ணாக பிறந்தவள் தான் ௨னக்கு ௨௫வமும் கொடுத்து ௨யிர் கொடுத்தாலே….!!!!!

வாழ்க்கை கணக்கு

போடும் கணக்கில் பிழை இருந்தால்
அவன் மனிதன்…….!
போட்ட கணக்கு சரி என்றால்
அவன் இறைவன்….!